ஆசிரியை கண்டித்ததால் 9–ம் வகுப்பு மாணவன் தீக்குளிப்பு


ஆசிரியை கண்டித்ததால் 9–ம் வகுப்பு மாணவன் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 3:38 AM IST (Updated: 9 Feb 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே ஆசிரியை கண்டித்ததால் 9–ம் வகுப்பு மாணவன் தீக்குளித்தான். அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர்,

விருதுநகர் அருகேயுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9–ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் நேற்று பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளான். இதுகுறித்து ஆசிரியை கேட்டபோது, முடிவெட்டச்சென்றதால் பள்ளிக்குவர தாமதமாக வந்ததாக தெரிவித்துள்ளான். எனினும் தாமதமாக வந்ததை ஆசிரியை கண்டித்ததாக தெரிகிறது.

மேலும் அவன் வித்தியாசமாக முடி வெட்டியிருந்ததைப்பார்த்து சக மாணவர்கள் கிண்டல் செய்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு அந்த மாணவன் வந்துள்ளான்.

வீட்டுக்கு வந்த நிலையில் அந்த மாணவன் திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டான். உடல் கருகிய நிலையில் அவன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story