உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை


உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Feb 2019 4:30 AM IST (Updated: 9 Feb 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டுத்தரக்கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

உசிலம்பட்டி,

பேரையூர்தாலுகா, புல்லுக்கட்டை ஊராட்சிக்கு உட்பட்டது பொன்னையாபுரம். இந்த கிராமத்திற்கு பேரையூர் ஜமீன்தார் பொதுமக்களின் பொதுப்பயன்பாட்டிற்காக தானமாக இடம் வழங்கியுள்ளதாகவும் அதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும், இந்த கிராமமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அருகில் உள்ள தனிநபர், வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக நேற்று பொன்னையாபுரம் கிராமமக்கள் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து கிராமமக்களிடம் ஆர்.டி.ஓ. முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஆவணங்களின்படி உள்ள இடத்தை முறையாக அளவீடு செய்து தருகிறோம். அதுவரை பிரச்சினை ஏதும் செய்யவேண்டாம். அதிகாரிகள் யாரும் தவறாக செயல்பட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story