பாகூர் அரசு அலுவலகங்களில் மின் இணைப்பு துண்டிப்பு கட்டண பாக்கி செலுத்தாததால் அதிரடி
மின் கட்டண பாக்கி செலுத்தாததால் பாகூர் தாலுகா அலுவலகம், கொம்யூன் பஞ்சாயத்து திருமண மண்டபம் உள்பட 10 அரசு அலுவலகங்களில் மின் இணைப்பு அதிரடியாக துண்டிக்கப்பட்டது.
பாகூர்,
இதையடுத்து தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மின் கட்டண பாக்கியை செலுத்தியது. ஆனால் பல அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் மின்துறையின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை.
பாகூரில் தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து திருமண மண்டபம் நீண்ட நாட்களாக மின் கட்டண பாக்கி வைத்துள்ளது. இந்த கட்டண பாக்கியை செலுத்த பலமுறை எச்சரித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்தநிலையில் பாகூர் மின்துறை இளநிலை பொறியாளர் பிரபுராமன் தலைமையில் ஊழியர்கள் குழுக்களாக சென்று தாலுகா அலுவலகம், கொம்யூன் பஞ்சாயத்து திருமண மண்டபம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அந்த அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின்போது சில இடங்களில் அரசு அதிகாரிகள் மின்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி மின் இணைப்பு அதிரடியாக துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தந்த அலுவலக பொறுப்பு அதிகாரிகள், தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து ஒரு வாரத்திற்குள் மின் கட்டண பாக்கியை செலுத்தி விடுவதாக உறுதியளித்தனர். ஒரு வாரத்திற்குள் கட்டண பாக்கியை செலுத்தவில்லை என்றால் மீண்டும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து, மின் இணைப்பு வழங்கினர்.
மின்கட்டண பாக்கி வைத்துள்ள போலீஸ் நிலையம், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு மின்துறை அதிகாரிகள் நேரில் சென்று, மின் கட்டண பாக்கியை உடனே செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். அரசு அலுவலகங்களில் அதிரடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் பாகூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story