தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 20–ந் தேதி நடக்கிறது


தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 20–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 10 Feb 2019 3:00 AM IST (Updated: 9 Feb 2019 7:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20–ந் தேதி நடக்கிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20–ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 20–ந் தேதி (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிப்பி கூடத்தில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் முன்னாள் படைவீரர்கள் தங்கள் மனுவின் 2 பிரதிகளுடன் அசல் மற்றும் நகல், படைவீரர் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும். தற்போது கணினி மூலம் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்வதால் முன்னாள் படைவீரர் எண், தகுதி, பெயர், தந்தையின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவைகள் மனுவில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

கூடுதல் விவரங்கள்

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நலன், தூத்துக்குடி என்ற முகவரில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story