கயத்தாறு அருகே புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
கயத்தாறு அருகே பணிக்கர்குளம் பஞ்சாயத்து நாகலாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் செலவில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.
கயத்தாறு,
கயத்தாறு அருகே பணிக்கர்குளம் பஞ்சாயத்து நாகலாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் செலவில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, புதிய சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர், அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மயான சாலை, ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்டு தள கற்கள் பதிக்கப்பட்ட சாலை ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
முன்னதாக கழுகுமலை பசும்பொன் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்த கட்டிடம், கரடிகுளத்தில் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கழுகுமலை தூய மரியன்னை தொடக்கப்பள்ளியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் அவர், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கிளை செயலாளர் வேலுச்சாமி, பணிக்கர்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.