ஆடியோ போலியானது என எடியூரப்பா நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு பேட்டி
பேரம் பேசிய ஆடியோ போலியானது என எடியூரப்பா நிரூபித்தால் நானும் அரசியலை விட்டு விலகத்தயார் என்று முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
மங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி மீதும், கட்சி மீதும் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதற்காக பா.ஜனதா ஆபரேஷன் தாமரை திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், கூட்டணி ஆட்சி மீது அதிருப்தியில் உள்ள காங்கிரசை சேர்ந்த ரமேஷ்ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், நாகேந்திரா, மகேஷ் கமடள்ளி ஆகிய 4 பேரும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பில் இல்லாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரும் பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவரும், மண்டியா கே.ஆர்.பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நாராயணகவுடா கடந்த 2 நாட்களாக மாயமாகி உள்ளார். அவரும் பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும், அதனால் அவர் மும்பை சென்று இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். முன்னதாக அவசரம், அவசரமாக குமாரசாமி பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர் பத்திரிகையாளர்களிடம், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. நாகனகவுடாவை இழுக்க எடியூரப்பா பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்ைட கூறினார். மேலும் இந்த பேரம் தொடர்பான ஆடியோவை அவர் வெளியிட்டார்.
அந்த ஆடியோவில் நாகனகவுடா எம்.எல்.ஏ.வை பா.ஜனதாவுக்கு இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவுடன் எடியூரப்பா பேரம் பேசுவது இடம்பெற்றுள்ளது.
இதனை மறுத்த எடியூரப்பா, அந்த ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல் இல்லை என்றும், குமாரசாமி சினிமாவில் இருந்து வந்ததால், என்னை போன்று யாரையோ குரல் மாற்றி அவர் பேச வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி குமாரசாமி விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார்.
பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்கு வந்தார். அப்போது அவரிடம், ஆடியோவில் தான் பேசவில்லை என்றும், அதனை குமாரசாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார் என்றும் எடியூரப்பா கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து குமாரசாமி கூறியதாவது:-
பா.ஜனதாவினர் ஆபரேஷன் தாமரை திட்டத்தை இன்னும் கைவிடவில்லை. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க அவர்கள் தொடர்ந்து முயற்சி ேமற்கொண்டு வருகிறார்கள். எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. நாகனகவுடாவை தங்கள் பக்கம் இழுக்க எடியூரப்பா பேரம் பேசியுள்ளார். இதுதொடர்பாக நாகனகவுடாவின் மகன் ஷரண் கவுடா என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் அந்த ஆடியோவை பதிவு செய்யும்படி கூறினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து தான் இதனை செய்தோம். அந்த ஆடியோ உண்மையானது தான். எடியூரப்பாவுடன் அடிக்கடி பேசுபவர்களுக்கு, அந்த ஆடியோவில் பேசியது யார்? என்று தெரியும். நள்ளிரவில் ஒரு எம்.எல்.ஏ.வை அழைத்து பேச வேண்டிய அவசியம் என்ன.
நான் தர்மஸ்தலா கோவிலில் நின்று பேசுகிறேன். இங்கு சத்தியம் செய்து கூறுகிறேன். நான் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. முன்பு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது தர்மஸ்தலா கோவிலில் பொய் பேசினார். அதன் விளைவு, ஒரு மாதத்தில் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.
நேற்று (அதாவது, நேற்று முன்தினம்) நான் வெளியிட்ட ஆடியோ உண்மையானது அல்ல என்றும், அதில் சினிமா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னை போன்று யாரோ குரல் மாற்றி பேசியிருப்பதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார். மேலும் ஆடியோவில் நான் தான் பேசினேன் என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
நான் இப்போது கூறுகிறேன். அந்த ஆடியோ உண்மையானது தான். இதுதொடர்பாக சபாநாயகர் விசாரணை நடத்துவதாக கூறியுள்ளார். விசாரணையில் உண்மை தெரியவரும். அது போலியானது என்று எடியூரப்பா நிரூபித்தால் நானும் அரசியலை விட்டே விலகத்தயார்.
இன்று (நேற்று) காலையில் கூட பா.ஜனதாவினர் எங்கள் கட்சியினரை அழைத்து பேசியுள்ளனர். எம்.எல்.ஏ.க்களை இழுக்க அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதாவை சேர்ந்த அசோக் நாராயணா, யோகேஷ்வர் ஆகியோர் யார்-யாருக்கு போன் செய்து பேசுகிறார்கள் என்ற விவரம் எனக்கு தெரியும். கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எடியூரப்பா அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் என்னுடைய தலைமையிலான கூட்டணி ஆட்சி பாறை போன்று ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. அதனை யாரும் அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி, தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் சார்பில் 98 குளங்களை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குமாரசாமியை தர்மஸ்தலா கோவில் அதிகாரி வீரேந்திர ஹெக்டேவும், பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்த சுவாமியும் வரவேற்றனர்.

Related Tags :
Next Story