பொள்ளாச்சியில் நவீன மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது எப்படி? அதிகாரிகள் செயல்விளக்கம்


பொள்ளாச்சியில் நவீன மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது எப்படி? அதிகாரிகள் செயல்விளக்கம்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:30 AM IST (Updated: 9 Feb 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் நவீன மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் செயல்விளக்கம் அளித்தனர்.

பொள்ளாச்சி,

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்காளர்கள் யாருக்கு? எந்த சின்னத்தில் வாக்களிக்கின் றனர். என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் நவீன மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எந்திரத்தை கையாளுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சியை சப்-கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் கோட்ட கலால் அலுவலர் சசிரேகா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் முருகேசன், வருவாய் ஆய்வாளர் பட்டுராஜன், கிராம நிர்வாக அலுவலர் தனராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நவீன மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் செயல் விளக்கம் அளித்தனர். பின்னர் அதனை பொதுமக்களும் செய்து பார்த்தனர். இதுகு றித்து பொள்ளாச்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எம் 3 என்கிற மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எந்திரத்தில் வாக்காளர்கள் ஓட்டு போட்டதும், அவர்கள் வாக்களித்த சின்னம் மற்றும் வேட்பாளரின் பெயர் அருகில் உள்ள திரையில் 7 நொடிகள் தெரியும். இது தவிர அதற்கான ரசீது உள்ளே எந்திரத்தில் விழுந்து விடும். அதை உடனடியாக பார்க்க முடியாது. வாக்கு எண்ணிக்கையின் போது சந்தேகம் இருந்தால், அந்த ரசீதை எடுத்து காண்பிக்கப்படும்.

பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளும், வால்பாறை சட்டசபை தொகுதியில் 235 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து வாக்குச்சாவடிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக ஒரு சட்டசபை தொகுதிக்கு 6 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு தாசில்தார், கண்காணிப்பாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இருப்பார்கள். வருகிற 14-ந்தேதி வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story