கடலூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்


கடலூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Feb 2019 10:45 PM GMT (Updated: 9 Feb 2019 6:44 PM GMT)

கடலூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் குறித்த விழிப் புணர்வு பிரசார வாகனங் களை கலெக்டர் அன்பு செல்வன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர், 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப் பதிவை உறுதி செய்யும் எந்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் தொடக்க விழா கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹால் அருகில் நடைபெற்றது. இதை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு பிரசார வாகனங்களை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும்.

ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செயல்படுத்தி வருகின்ற வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் பொதுமக்களிடையே தொடர்ந்து வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக் கப்பட்டுள்ளன. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர் தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால் வாக்காளர்கள் அனைவரும் எந்த தயக்கமும், அச்சமும் இன்றி தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையம் மாவட்டங்கள் தோறும் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தின் செயல் பாடுகள் குறித்து வாக் காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழுக்கள் அமைத்து இன்று (நேற்று) முதல் வருகிற 13-ந் தேதிவரை 5 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் சிறப்பு முகாம் நடத்தி, மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தவும் அறிவுரை வழங்கி இருக்கிறது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் 2,300 வாக்குச்சாவடிகள், 1,198 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற் காக 62 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் 248 பணியாளர்கள் மற்றும் 62 ஆயுதம் ஏந்திய போலீஸ் காரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தினந்தோறும் காலை 2 மையங்கள், பிற்பகல் 2 மையங்களில் பொது மக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் வருகிற நாடாளுமன்ற தேர் தலில் 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சப்-கலெக்டர் சரயூ, தேர்தல் தாசில்தார் பாலமுருகன், கடலூர் தாசில்தார் சத்தியன், தேர்தல் துணை தாசில்தார்கள் துரைராஜ், ராஜேஷ்பாபு மற்றும் வருவாய் ஆய்வா ளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story