விழிப்புணர்வு வாகன பிரசாரம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


விழிப்புணர்வு வாகன பிரசாரம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Feb 2019 3:45 AM IST (Updated: 10 Feb 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளருக்கு உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்முறை விளக்கம் அளித்தார்.

இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை சோதனை செய்து பார்த்தார்கள். பின்னர் கலெக்டர் வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் தொடங்கி வைக்கப்படுகிறது. ஓவ்வொரு சட்டமன்றத்திற்கும் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3,583 வாக்குச்சாவடிகள் அடங்கிய 1,194 வாக்குச்சாவடி மையங் கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரூபன், தனி தாசில்தார் பாபு, திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story