களியக்காவிளை அருகே பரிதாபம் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 வாலிபர்கள் பலி 4 பேர் படுகாயம்
தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 வாலிபர்கள் பலியாயினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
களியக்காவிளை,
குழித்துறையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் இருந்தனர். கார் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சென்றடைந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதைக்கண்டு ரோட்டில் நடந்து சென்றவர்கள் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்படி இருந்தும் கார் எதிரே வந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியபடி சென்று, சாலையோர வீட்டின் மோதி நின்றது.
கார் மோதியதில், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். ஆங்காங்கே நின்றவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களும் உயிருக்கு போராடியபடி அபய குரல் எழுப்பினர். பின்னர் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், 5 பேரில் ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர்கள் மற்றும் விபத்தை ஏற்படுத்திய கார் ஆகியவை குறித்த தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
திருவனந்தபுரம் மணக்காடு பகுதியை சேர்ந்த 4 பேர் காரில் பயணம் செய்துள்ளனர். அந்த 4 பேரும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. இந்த விபத்தில் நித்திரவிளை அருகே கிராத்தூரை சேர்ந்த ஞானதாஸ் மகன் தாஜூ (வயது 26), ஸ்டீபன் மகன் லியோன் (22) ஆகிய 2 பேர் பலியானார்கள். மேலும் அதே ஊரை சேர்ந்த சிபின், மருதங்கோடு வக்கீல் மகேஷ் உள்பட 4 பேர் படுகாயமடைந்தது தெரியவந்தது.
விபத்தை ஏற்படுத்தியதும் காரில் இருந்த 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஆசிப் என்பவர் மட்டும் போலீசிடம் சிக்கினார். இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story