ஓசூர், வேப்பனப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
ஓசூர், வேப்பனப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓசூர் கோட்ட மேலாளர் சுரேஷ் பாபு தலைமை தாங்கினார். ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், தனியார் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, ஓசூர் பஸ் நிலையத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
இதில், போக்குவரத்து கழக தலைமை உயர் அதிகாரி தமிழரசன், கிளை மேலாளர் முருகவேல், மணிவண்ணன், விபத்து பிரிவு ஆய்வாளர் முனியப்பன், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேப்பனப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேப்பனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமை தாங்கினார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலத்தில் மாணவிகள் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், வாகனங்களில் செல்லும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். இதில், போலீசார் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story