மாவட்ட செய்திகள்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு + "||" + Thousands of pound chain flashes to the girl at Tanjay Old Bus Station

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் பஸ் ஏற முயன்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த ரெட்டிப்பாளையம் அருகே உள்ள சக்காராபேட்டையைச் சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் பிரியா (வயது 22). இவர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் பஸ்சில் வேலைக்கு வந்து விட்டு பஸ்சில் வீடு திரும்புவது வழக்கம்.

சம்பவத்தன்று வேலை முடிந்த பின்னர் பிரியா வீட்டிற்கு செல்வதற்காக தஞ்சை பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏற முயன்றார். அப்போது பஸ்சின் அருகே நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்கள் பிரியா கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினர்.

போலீஸ் வலைவீச்சு

இதனைப்பார்த்த பிரியா திருடன், திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் 2 பேரும் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து பிரியா தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
பெரம்பலூரில் நடை பயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. கிருஷ்ணகிரியில் கணவன் கண் முன்பு துணிகரம்: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு
கிருஷ்ணகிரியில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் அவரது கணவன் கண் முன்பே கத்தியை காட்டி நகையை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மூதாட்டியிடம் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கைவரிசை
அகஸ்தீஸ்வரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து, மூதாட்டியிடம் 1½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
5. தஞ்சையில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு வலைவீச்சு
தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.