மாவட்ட செய்திகள்

கீரனூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + AIADMK near Kiranur The person who committed suicide is dead

கீரனூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை

கீரனூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை
கீரனூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கீரனூர், 

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள ஒத்தக்கடை மேலப்புதுவயலை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45). அ.தி.மு.க. பிரமுகரான இவர், அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளர். இவர் வடக்கு ரதவீதியில் காய்கறிகள், பழங்கள் வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் வியாபாரத்திற்கு வாங்குவதற்காக வழக்கம் போல் நேற்று அதிகாலை திருச்சி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி, பழங்களை வாங்கினார். பின்னர் வாங்கிய காய்கறி, பழங்களை கடையில் வைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அதனை எடுக்க விஜயபாஸ்கர் நீண்ட நேரமாகியும் கடைக்கு வரவில்லை.

இதையடுத்து கடைக்காரர்கள் விஜயபாஸ்கர் செல்போனுக்கு தொடர்பு கொண்டும், அவர் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்து கடையில் வேலை பார்ப்பவர்கள், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் விஜயபாஸ்கர் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயபாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விஜயபாஸ்கர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கருக்கு, மகாலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி அருகே சோகம் ரெயில்முன் பாய்ந்து வயதான தம்பதி தற்கொலை போலீசார் விசாரணை
திருச்சி அருகே ரெயில் முன் பாய்ந்து வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தீக்குளித்து தற்கொலை
பூதப்பாண்டி அருகே மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. கமுதி அருகே இளம்பெண்ணை கொன்றுவிட்டு காதலன் கொன்றதாக நாடகமாடிய உறவினர்கள்; அரசு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை பெற்று மோசடி செய்ததும் அம்பலம்
இளம்பெண்ணை அவருடைய உறவினர்களே கொடூரமாக கொன்றுவிட்டு, அவருடைய கள்ளக்காதலன் கொன்றதாக திசை திருப்பிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிய வைத்து அரசு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை மோசடியாக பெற்றதும் தற்போது அம்பலமாகி உள்ளது.
4. கடன் தொல்லையால், காருக்குள் இருந்தபடி நகைக்கடை உரிமையாளர், தீக்குளித்து தற்கொலை
கடன் தொல்லையால், காருக்குள் இருந்தபடி நகைக்கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. ஈரோட்டில் பயங்கரம் தாயை அடித்துக்கொன்று மகன் தற்கொலை
ஈரோட்டில் தாயை அடித்துக்கொன்று மகன் தற்கொலை செய்துகொண்டார்.