சேலத்தில் சந்துக்கடையில் மது விற்ற 4 பெண்கள் உள்பட 9 பேர் கைது 1,200 பாட்டில்கள் பறிமுதல்


சேலத்தில் சந்துக்கடையில் மது விற்ற 4 பெண்கள் உள்பட 9 பேர் கைது 1,200 பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Feb 2019 4:15 AM IST (Updated: 11 Feb 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சந்துக்கடையில் பதுக்கி மது விற்பனை செய்த 4 பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம், 

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் பலர் சந்துக்கடைகளில் மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் மது குடித்து விட்டு ஒரு சிலர் குடிபோதையில் அங்கு நின்று கொண்டு அந்த வழியாக வரும், பெண்களை கிண்டல் செய்வதும், தகாத வார்த்தைகளால் திட்டுவதுமாக பல்வேறு புகார்கள் வந்தன.

மேலும் சில நேரங்களில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதையொட்டி சந்துக்கடைகளை அகற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள சந்துக்கடைகளை அகற்ற வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி நேற்று சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர் மிதுன்குமார் மற்றும் போலீசார் ஜாகீர்அம்மாபாளையம், ரெட்டியூர், பழைய சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் சந்துக்கடையில் மது பதுக்கி விற்பனை செய்த மணி (வயது 41), மருதாயி (46), பாலு (40), கதிரேசன் (41), கலா (55), சாந்தி (42), செல்வி (47), விக்னேஷ் (40) ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதே போன்று கொண்டலாம்பட்டி போலீசார், பெரியபுத்தூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபானம் பதுக்கி விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி (54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story