மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு


மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Feb 2019 3:00 AM IST (Updated: 11 Feb 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வேட்டவலம், 

வேட்டவலத்தை அடுத்த ஜமீன்அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கண்ணன் (வயது 42). இவர் சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு, அங்குள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருள்சுபா (35). இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார்.

கண்ணன் கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி ஜமீன்அகரம் கிராமத்தை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அருள்சுபா கடந்த ஜனவரி 22-ந் தேதி ஜமீன்அகரம் கிராமத்திற்கு வந்து, கண்ணனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கண்ணன் மற்றும் உறவினர்கள் அருள்சுபாவை அடித்தாக கூறப்படுகிறது. பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து வேட்டவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் விசாரணை நடத்தி வந்தார். ஆனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து அருள்சுபா சப்-இன்ஸ்பெக்டரிடம் போனில் தகவல் கேட்டுள்ளார்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் மேலதிகாரிகளின் சொல்படிதான் நடக்க முடியும் என்றும் கூறி உள்ளார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்சுபாவின் கணவர் கண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேரை தேடி வருகின்றனர்.

Next Story