பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் இல்லை சரத்குமார் பேட்டி


பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் இல்லை சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 11 Feb 2019 5:00 AM IST (Updated: 11 Feb 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மதுரை,

தமிழக பட்ஜெட் வரவு, செலவு கணக்கு கொடுத்தது போல் இருக்கிறது. 2011–ல் கடன்சுமை ரூ.1 லட்சம் கோடி இருந்தது. ஆனால் தற்போது கடன்சுமை ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கோடி வரை அதிகரித்து உள்ளது. இந்தக் கடனை குறைப்பதற்கு, வருவாயை அதிகப்படுத்துவதற்கு எந்த திட்டம் இல்லை. அத்திக்கடவு–அவினாசி திட்டம் போடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கான எந்த ஒரு திட்டமும் இல்லை. கஜா புயலுக்கு மாநில அரசு, மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளது. தற்போது அது வராமல் உள்ளது. விவசாயிகளுக்கு போன பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அறிவிப்பு அதிகமாக இருக்கிறது, அதனை சரிவர செய்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story