நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீர் பணியிடை நீக்கம்


நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 11 Feb 2019 5:00 AM IST (Updated: 11 Feb 2019 5:00 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தென்காசி, 

நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் (வயது 58). இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும் பணியாற்றி வந்தார்.

இவர் வருகிற 28-ந்தேதி பணி ஓய்வு பெற இருந்தார்.

இந்த நிலையில் சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீரென இளங்கோவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இளங்கோவன் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார துறை அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story