கிராமிய அஞ்சல் ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்


கிராமிய அஞ்சல் ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
x

கிராமிய அஞ்சல் ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை, 

அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க நெல்லை கோட்ட 10-வது மாநாடு நேற்று பாளையங்கோட்டை தலைமை தபால் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கோட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ஞானபாலசிங் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பொதுச் செயலாளர் ஜேக்கப் ராஜ், மாநில துணை தலைவர் பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டில், காலியாக உள்ள அனைத்து கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களை அஞ்சல் கூட்டுறவு வங்கியில் இணைத்து கடன் வசதி செய்து தரவேண்டும். பணிக்கொடை தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் புதிய தலைவராக நடராஜன், செயலாளராக ஞானபாலசிங், பொருளாளராக நம்பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்னர்.

மாநாட்டில் மாநில செயலாளர் இஸ்மாயில், ஜான்பிரிட்டோ, பாஸ்கரன், தூத்துக்குடி கோட்ட செயலாளர் செல்வராஜ், கோவில்பட்டி கோட்ட நிர்வாகிகள் பூராஜா, பிச்சையா, சங்கரன்கோவில் நிர்வாகி ராஜாமணி, அம்பை ஏகாம்பரம், ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story