ஊத்தங்கரையில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


ஊத்தங்கரையில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 5:04 PM GMT)

ஊத்தங்கரையில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஊத்தங்கரை, 

ஊத்தங்கரை பழைய பஜார் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 68). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு சேலத்திற்கு கண் சிகிச்சைக்காக சென்றார். அந்த நேரம் அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து உள்ளே வைத்திருந்த 15 பவுன் நகைகளை திருடி சென்றனர்.

இந்த நிலையில் கண் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த லோகநாதன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

லோகநாதன் இது குறித்து ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனிமொழி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதே போல கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊத்தங்கரையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story