கோட்டக்குப்பம் அருகே, வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை
கோட்டக்குப்பம் அருகே மது குடித்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வானூர்,
கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் அருள்செல்வன் (வயது 24), தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை பார்த்த அவரது தாய் பாக்கியலில்லி, மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும் என்று கூறி அருள்செல்வனை கண்டித்ததாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த அவர், பாக்கியலில்லியை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். இதையடுத்து பாக்கியலில்லி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினார்.
இதற்கிடையே மது குடித்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அருள்செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து சென்று அருள்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story