தஞ்சை மாவட்டத்தில் 19 தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் 19 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு பிறப்பித்தார்.
தஞ்சாவூர்,
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி புரியும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் தாசில்தார் நிலையில் நிர்வாக நலன் கருதி தாசில்தார்கள் மாறுதல் மற்றும் நியமனம் வழங்கி, அதற்கான உத்தரவை கலெக்டர் அண்ணாதுரை பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சு.கார்த்திகேயன்(பூதலூர் சமூக பாதுகாப்பு திட்ட முன்னாள் தனி தாசில்தார்) பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், வீ.மைதிலி (பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் ) பூதலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், டி.பி.சுசிலா (பூதலூர் தனி தாசில்தார்) கும்பகோணம் நகர நிலவரி திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
து.கண்ணன் (கும்பகோணம் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார்) பாபநாசம் வருவாய் தாசில்தாராகவும், து.மாணிக்கராஜ் (பாபநாசம் வருவாய் தாசில்தார்) மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலக தனி தாசில் தாராகவும், எஸ்.கார்த்திகேயன்(மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலக தனி தாசில்தார்) பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், ச.அருள் பிரகாசம்(சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்) பட்டுக்கோட்டை வருவாய் தாசில்தாராகவும், ஜி.சாந்தகுமார்(பட்டுக்கோட்டை வருவாய் தாசில்தார்) பட்டுக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டனர்.
பி.அருள்ராஜ்(பட்டுக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்) ஒரத்தநாடு வருவாய் தாசில்தாராகவும், ஆர்.ரமேஷ் (ஒரத்தநாடு வருவாய் தாசில்தார்) பேராவூரணி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், எஸ்.ரீட்டாஜெர்லின் (பேராவூரணி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்) தஞ்சை டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், ஜி.சிவக்குமார்(தஞ்சை டாஸ்மாக் கிடங்கு மேலாளர்) பூதலூர் வருவாய் தாசில்தாராகவும், கு.இளங்கோ (பூதலூர் வருவாய் தாசில்தார்) திருவையாறு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
து.நெடுஞ்செழியன் (திருவையாறு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்) கும்பகோணம் தாசில்தாராகவும், கா.பா.மல்லிகாதேவி(பட்டுக்கோட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார்) மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், நா.சுஜாதா(மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர்) தஞ்சை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், கு.தமிழ்ஜெயந்தி(தஞ்சை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார்) ஒரத்தநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், எஸ்.இளம்மாருதி(ஒரத்தநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்) திருவையாறு வருவாய் தாசில்தாராகவும், ஆர்.ராமச்சந்திரன்(திருவையாறு வருவாய் வட்டாட்சியர்) பட்டுக்கோட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story