மாவட்ட செய்திகள்

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார் + "||" + Road safety weekend ceremony 'Helmet' awareness rally Collector Raman started

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
வேலூரை அடுத்த பொய்கை மோட்டூரில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
வேலூர், 

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி வேலூர் மாவட்ட போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட போக்குவரத்து போலீஸ் சார்பில் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டது.

அதேபோன்று மாணவர்கள் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்ளும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள், மாணவ-மாணவிகள், டிரைவர்களுக்கு மருத்துவ முகாம், மினி மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம் வேலூரை அடுத்த பொய்கை மோட்டூரில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

ஊர்வலம் பொய்கை மோட்டூரில் தொடங்கி சென்னை-பெங்களூரு சர்வீஸ் சாலை வழியாக சென்று பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே நிறைவடைந்தது. இதில் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள், பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி சென்று போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், சாலை இயக்க தலைமை அலுவலர் ஜஸ்டின் சாமுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி கலெக்டர் ராமன் வழங்கினார்
முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.
2. நாடாளுமன்ற தேர்தலையொட்டி 13 தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் கலெக்டர் ராமன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.
3. நாராயணி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை சார்பில் காட்பாடி ரெயில் நிலையத்தில் நடந்த புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
4. மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோருக்கு வங்கி கடனுதவி பெற்றுத்தர நடவடிக்கை கலெக்டர் ராமன் பேச்சு
தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கி கடனுதவி பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.
5. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளிகள் செயல்பட நடவடிக்கை கலெக்டர் ராமன் உத்தரவு
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களை காலி பணியிடங்களாக கருதி அந்த இடத்திற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து 28–ந் தேதி வழக்கம்போல பள்ளிகள் செயல்பட நடவடிக்கை எடுக்க கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...