கீழக்கரையில் மணல் அள்ளும் எந்திரம் கவிழ்ந்து ஆட்டோ நசுங்கியது பெண் உள்பட 2 பேர் படுகாயம்


கீழக்கரையில் மணல் அள்ளும் எந்திரம் கவிழ்ந்து ஆட்டோ நசுங்கியது பெண் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 10:30 PM GMT)

கீழக்கரையில் மணல் அள்ளும் எந்திரம் கவிழ்ந்து ஆட்டோ நசுங்கியது. இதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கீழக்கரை,

ராமநாதபுரத்தில் இருந்து ஏர்வாடிக்கு ஒரு லாரியில் மணல் அள்ளும் எந்திரம் ஏற்றிச்செல்லப்பட்டது. இந்த லாரி கீழக்கரையில் இருந்து ஏர்வாடி செல்லும் சாலையில் உள்ள வளைவில் அதிவேகமாக திரும்பியபோது மேலே இருந்த மணல் அள்ளும் எந்திரம் கவிழ்ந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது. இதில் அந்த ஆட்டோ நசுங்கியது.

அப்போது அதில் அமர்ந்திருந்த ஆட்டோ டிரைவர் மாவிலைத்தோப்பு கிராமத்தை சேர்ந்த மாயாண்டி மகன் மூர்த்தி(வயது 51), அருகில் பஸ்சுக்காக காத்திருந்த மருகன்தோப்பு ராஜேந்திரன் மனைவி சாந்தி(45) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story