தாராவி இரட்டை கொலை வழக்கு ‘‘பிறந்த நேரம் சரியில்லாததால் மகளை கொன்றேன்’’ கைதான தந்தை வாக்குமூலம்


தாராவி இரட்டை கொலை வழக்கு ‘‘பிறந்த நேரம் சரியில்லாததால் மகளை கொன்றேன்’’ கைதான தந்தை வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 10:57 PM GMT)

‘‘பிறந்த நேரம் சரியில்லாததால் மகளை கொன்றேன்’’ என தாராவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

மும்பை, 

மும்பை தாராவி கமலா நகர், டைமண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் இலியாஸ் செயத் (வயது38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்காதலி ஆப்ரின் பானுவுடன் (22) சேர்ந்து மனைவி தாகசின் ஐஹ்ரா (34), மகள் அலியாவை (4) கழுத்தைஅறுத்து கொலை செய்தார். பின்னர் அவரது கள்ளக்காதலி ஆப்ரின் பானு இருவரது உடலையும் தீவைத்து எரித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாகபோலீசார் வழக்குப்பதிவு செய்து இலியாஸ் செயத் மற்றும் ஆப்ரின் பானுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது இலியாஸ் செயத் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது இளைய மகளால் (அலியா) எனக்கு கெட்ட நேரம் வந்தது. அவள் பிறந்ததில் இருந்து எனக்கு எல்லாவற்றிலும் நஷ்டம் தான் ஏற்பட்டது. எனவே தான் மனைவியுடன் அவளையும் கொலை செய்தேன். நான் ஆப்ரின் பானுவை திருமணம் செய்துவிட்டு மூத்த மகளுடன் வாழ விரும்பினேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story