செல்போன் தர மறுத்த ஆத்திரத்தில் லாரி முன் தள்ளி வாலிபர் கொலை நண்பர் கைது


செல்போன் தர மறுத்த ஆத்திரத்தில் லாரி முன் தள்ளி வாலிபர் கொலை நண்பர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2019 4:00 AM IST (Updated: 12 Feb 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் தர மறுத்த ஆத்திரத்தில் லாரி முன் தள்ளிவிட்டு வாலிபரை கொன்ற வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை, 

தென்மும்பை பகுதியில் உள்ள ஒரு மதுபானவிடுதியில் சம்பவத்தன்று கிஷோர் (வயது32), அவரது நண்பர் விஜய் (30) மற்றும் சிவா (29) ஆகிய 3 பேர் ஒன்றாக சேர்ந்து மது குடித்து உள்ளனர். அப்போது போன் பேச வேண்டும் என கூறி சிவா, கிஷோரின் செல்போனை கேட்டு உள்ளார்.

ஆனால் கிஷோர் செல்போனை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து கிஷோரும், விஜய்யும் மதுபான விடுதியை விட்டு வெளியே வந்தனர். இதில் அவர்களை பின்தொடர்ந்து வந்த சிவா ஆத்திரத்தில் கிஷோரை அந்த வழியாக வந்த லாரி முன் தள்ளினார். இதில் லாரி மோதி கிஷோர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபரை லாரி முன் தள்ளிவிட்ட நண்பர் சிவாவை கைது செய்தனர்.

Next Story