மாவட்ட செய்திகள்

வேக தடுப்பு கம்பியில் மோதியதால் பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற சப்–கலெக்டர் மகன் பலி + "||" + The speed bar stops on the barrier A retired sub-collector's son on a motorcycle kills

வேக தடுப்பு கம்பியில் மோதியதால் பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற சப்–கலெக்டர் மகன் பலி

வேக தடுப்பு கம்பியில் மோதியதால் பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற சப்–கலெக்டர் மகன் பலி
சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த சப்–கலெக்டர் மகன் வேக தடுப்பு கம்பியில் மோதி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

சோழவந்தான்,

மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் அன்புநாதன். சப்–கலெக்டராக விருதுநகரில் பணிபுரிந்து 2 மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்றார். தற்போது பவானிசாகர் அரசு பயிற்சி பள்ளியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மகன் வெற்றியரசன் (வயது 30). வியாபாரம் செய்து வந்தார். இவர், தனது நண்பர் அருண் என்பவருடன் திண்டுக்கல்லில் உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் நண்பருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது சோழவந்தான் அருகே நகரி கிராமத்தில் நான்குவழிச்சாலையில் வந்தபோது வேக தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து வெற்றியரசன், அருண் ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த வெற்றியரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த அருண் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பழனி அருகே தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் என்ஜினீயர் மர்ம சாவு; உறவினர்கள் சாலை மறியல்
பழனி அருகே தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்ததாக கூறி, அவரின் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்
2. பொள்ளாச்சி அருகே மீண்டும் சம்பவம்: காட்டுயானை தாக்கி தொழிலாளி சாவு
பொள்ளாச்சி அருகே நவமலையில் காட்டுயானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
3. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன; கலெக்டர் ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனை கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4. லாரி–மினி லாரி மோதல்: தந்தை–மகன் உள்பட 4 பேர் பலி
லாரி–மினி லாரி மோதியதில் தந்தை–மகன் உள்பட 4 பேர் பலியானார்கள்.
5. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.