களியக்காவிளை பஸ் நிலைய விரிவாக்க பணி தொடங்கியது


களியக்காவிளை பஸ் நிலைய விரிவாக்க பணி தொடங்கியது
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 3:09 PM GMT)

களியக்காவிளை பஸ் நிலைய விரிவாக்க பணி தொடங்கியது.

களியக்காவிளை,

குமரி–கேரள எல்லையில் களியக்காவிளை பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு தினமும் ஏராளமான தமிழக–கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், பூவார், நெடுமங்காடு போன்ற பகுதிகளுக்கும், தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல், சேலம், வேளாங்கண்ணி, மதுரை, நெல்லை உள்பட பல்வேறு இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

களியக்காவிளை பஸ் நிலையத்தில் இடவசதி குறைவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. ஆகவே, பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்கான ஆய்வு பணி, வரைபடம் தயாரித்தல், அளவீடு பணி நடந்தது. இந்த பஸ் நிலையத்தையொட்டி காய்கனி சந்தை உள்ளது. காய்கனி சந்தையின் குறிப்பிட்ட பகுதி பஸ் நிலையத்துடன் இணைக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதன்படி, பஸ் நிலைய விரிவாக்க பணி தொடங்கியது.

முதற்கட்டமாக பஸ் நிலையத்துக்கும், காய்கனி சந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றும் பணி நடந்தது. மேலும் காய்கனி சந்தையில் மேடு பள்ளமான இடத்தை சமன்செய்யும் பணி நடந்து வருகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி முழுமையாக சமன் செய்யப்பட்ட பின்பு, கட்டுமான பணி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story