கேசவன் பூங்கா மைதானத்தில் குடியிருப்புகள் கட்ட வேண்டாம் பொதுமக்கள் வேண்டுகோள்


கேசவன் பூங்கா மைதானத்தில் குடியிருப்புகள் கட்ட வேண்டாம் பொதுமக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Feb 2019 10:15 PM GMT (Updated: 12 Feb 2019 4:16 PM GMT)

பூங்காவை சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை சேர்ந்த மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்கா மைதானத்திலேயே விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர்.

சென்னை, 

சென்னை புளியந்தோப்பில் கேசவன் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை சேர்ந்த மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்கா மைதானத்திலேயே விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். முதியோர்களும் நடைபயிற்சி செல்கின்றனர்.

இந்தநிலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் இந்த பூங்கா மைதானத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அங்கு விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், “2004-ம் ஆண்டு முதல் இந்த பூங்கா மைதானம் விளையாட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் பயனளித்து வருகிறது. இந்தநிலையில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டால் இங்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தவிர மாலை நேரம் இங்கு இளைப்பாறும் முதியோர்கள் அதிகம். எனவே இந்த குடியிருப்புகளை நகரின் வேறு எங்காவது அமைக்கலாம். மாணவர்களின் விளையாட்டு பயிற்சியை அழித்திட கூடாது. இதை அரசுக்கு எங்களின் வேண்டுகோளாக விடுக்கிறோம்”, என்றனர்.

Next Story