சின்னாளபட்டி, பொன்னகரம், ஏ.வெள்ளோடு பகுதிகளில் - நாளை மின்சாரம் நிறுத்தம்


சின்னாளபட்டி, பொன்னகரம், ஏ.வெள்ளோடு பகுதிகளில் - நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Feb 2019 3:00 AM IST (Updated: 12 Feb 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

சின்னாளபட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்,

செம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் வாட்டர் ஒர்க்ஸ், சின்னாளபட்டி, காந்திகிராமம், கொடைரோடு, சித்தையன்கோட்டை, சிறுமலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செம்பட்டி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முருகன் தெரிவித்தார்.

அதேபோல் திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்க இருக்கிறது. இதையொட்டி பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அத்துடன் தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளிபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம் ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.

காந்திகிராமம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி பிள்ளையார்நத்தம், தோமையார்புரம், மில்ஸ்காலனி, என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, ஆர்.எம்.டி.சி. காலனி, ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை மற்றும் சரவணாமில் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சின்னாளபட்டி மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story