மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே தண்டவாளத்தில் தலை வைத்து பள்ளி மாணவன் தற்கொலை + "||" + Keep the head on the rails School student suicide

கும்மிடிப்பூண்டி அருகே தண்டவாளத்தில் தலை வைத்து பள்ளி மாணவன் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே தண்டவாளத்தில் தலை வைத்து பள்ளி மாணவன் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே தண்டவாளத்தில் தலை வைத்து பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள கிளிக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. கூலித்தொழிலாளி. இவரது மகன் முகேஷ் (வயது 14). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று கவரைப்பேட்டை ரெயில் நிலையம் அருகே கவரைப்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் முன்பாக தண்டவாளத்தில் தலை வைத்து முகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொருக்குபேட்டை ரெயில்வே போலீசார் மாணவன் முகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குபேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை