மாவட்ட செய்திகள்

கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration of Kokri Government College students to provide education scholarship

கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்கக்கோரி மன்னார்குடி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுந்தரக்கோட்டை,

கஜா புயலால் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விழுந்த மரங்களை அப்புறப் படுத்த வேண்டும்.கழிப்பிடம், மைதானம், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிளை மேம்படுத்தி தர வேண்டும். கல்வி உதவி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் சரவணன், கிஷோர், ஹரிகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை விளக்கி மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பேசினர்.


இதில் மாவட்ட துணை தலைவர் பாரதி, மாணவர் மன்ற நிர்வாகிகள் கோபி, அஜீத், தமிழினியன், சேகுவேரா, லெட்சுமணன் உள்பட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. புதுக்கோட்டையில் அரசு டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்காள மாநிலத்தில் டாக்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து புதுக்கோட்டை அரசு கல்லூரி டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் 5-ந்தேதி ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 5-ந்தேதி கூட்டுறவு ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று சங்க தலைவர் கு.பாலகிரு‌‌ஷ்ணன் தெரிவித்தார்.
4. நாமக்கல்லில் டாக்டர்கள் ஹெல்மெட் அணிந்து ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்க மாநிலத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல்லில் டாக்டர்கள் ஹெல்மெட் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5. இந்தி திணிப்பை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
இந்தி திணிப்பை கண்டித்து நாகையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை