மாவட்ட செய்திகள்

எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம்கலெக்டர் தகவல் + "||" + Gas cylinder price fixing Collector information

எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம்கலெக்டர் தகவல்

எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம்கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

விலை நிர்ணயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் தூத்துக்குடியில் ரூ.719.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.717.50 ஆகவும், கழுகுமலையில் ரூ.726.50 ஆகவும், கயத்தாறில் ரூ.729.50 ஆகவும், எட்டயபுரத்தில் ரூ.718 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.736.50 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பாரத் பெட்ரோலியம்

பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.719.50 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.719.50 எனவும், 1.2.2019 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கு மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவை இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.