மாவட்ட செய்திகள்

நெல்லை மண்டலத்தில்மின்கட்டணம் செலுத்தும் மையம் 2 நாட்கள் செயல்படாதுஅதிகாரி தகவல் + "||" + In the Nellai region Center of payment 2 days will not work

நெல்லை மண்டலத்தில்மின்கட்டணம் செலுத்தும் மையம் 2 நாட்கள் செயல்படாதுஅதிகாரி தகவல்

நெல்லை மண்டலத்தில்மின்கட்டணம் செலுத்தும் மையம் 2 நாட்கள் செயல்படாதுஅதிகாரி தகவல்
நெல்லை மண்டலத்தில், வருகிற 16-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு மின்கட்டணம் செலுத்தும் மையங்கள் செயல்படாது என மின்பகிரிமான வட்ட மேற்பார்வை பொறியாளர் பையன் கிருஷ்ணராஜ் தெரிவித்து உள்ளார்.
நெல்லை, 

நெல்லை மண்டலத்தில், வருகிற 16-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு மின்கட்டணம் செலுத்தும் மையங்கள் செயல்படாது என மின்பகிரிமான வட்ட மேற்பார்வை பொறியாளர் பையன் கிருஷ்ணராஜ் தெரிவித்து உள்ளார்.

இடம் பெயர்வு...

நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பையன் கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 16(சனிக்கிழமை) மற்றும் 17-ந் தேதிகளில் நெல்லை மண்டலத்தில் மின்கட்டண சர்வர் தகவல்கள், புதிய பில்லிங் சர்வர்க்கு இடம் பெயர்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்கட்டணம் செலுத்தும் மையம் 16, 17-ந் தேதிகள் அன்று செயல்படாது.

2 நாட்கள் செயல்படாது

மேலும் புதிய பில்லிங் சர்வர்க்கு தகவல்கள் இடம்பெயர்வு நடைபெறும் சமயத்தில் மேற்கண்ட 2 நாட்களில் ஆன்லைன் கட்டண சேவையும் இயங்காது. ஆன்லைன் கட்டண சேவைகள் 18-ந் தேதி அன்று காலை 8 மணி முதல் செயல்படும். மேலும் 16, 17-ந் தேதிகளில் செலுத்த வேண்டிய மின்தொகையை, 18-ந் தேதி அன்று அபராத தொகை இல்லாமல் செலுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.