அம்மா திட்ட முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
அம்மா திட்ட முகாம்
அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நெல்லை தாலுகா-ராமலிங்கனேரி, ராதாபுரம்-கருங்குளம், அம்பை-பள்ளக்கால், நாங்குநேரி-கூந்தன்குளம், சேரன்மாதேவி-வடக்கு காருக்குறிச்சி, பாளையங்கோட்டை- பாளையங்கோட்டை பகுதி 1, சங்கரன்கோவில்-நரிக்குடி, திருவேங்கடம்-களப்பாளன்குளம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.
மனுக்கள்
முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு- இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் முகாமில் மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story