மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் குதிரை பேரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம்சட்டசபையில் குமாரசாமி பேச்சு + "||" + In Karnataka It is necessary to end the horse deal

கர்நாடகத்தில் குதிரை பேரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம்சட்டசபையில் குமாரசாமி பேச்சு

கர்நாடகத்தில் குதிரை பேரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம்சட்டசபையில் குமாரசாமி பேச்சு
கர்நாடகத்தில் குதிரை பேரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம் என்று சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
பெங்களூரு, 

கர்நாடகத்தில் குதிரை பேரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம் என்று சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

கர்நாடக சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி பேசும்போது கூறியதாவது:-

தண்டனையை அனுபவிக்க...

ஆடியோ உரையாடல் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்களில் நான் முதல் நபர் என்று எடியூரப்பா சொல்கிறார். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க தயாராக உள்ளேன்.

ஆடியோ உரையாடலில் திருத்தம் செய்ததாகவும், முழுமையான உரையாடலை வெளியிடவில்லை என்றும் எடியூரப்பா சொல்கிறார். இதற்கே இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது, 40 நிமிட உரையாடலையும் வெளியிட்டால் உங்கள் நிலைமை என்னவாகும் என்று சற்று யோசித்து பாருங்கள்.

சித்தராமையா எங்கள் தலைவர்

மீதமுள்ள உரையாடலையும் வெளியிட நான் தயாராக உள்ளேன். சித்தராமையா எங்கள் தலைவர் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொல்கிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது. நானும் கூட, சித்தராமையாவை எங்கள் தலைவர் என்றே சொல்கிறேன்.

அவரது ஆதரவால் தான் இந்த கூட்டணி அரசு இருக்கிறது என்று நான் ஏற்கனவே சொன்னேன். இது உண்மை தான். ஆடியோ உரையாடல் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள்.

நிரந்தரமானது இல்லை

அதிகாரிகள் எப்போதுமே, அரசுக்கு விசுவாசமாக செயல்படுகிறார்கள். முதல்-மந்திரிக்கு விசுவாசமாக செயல்பட மாட்டார்கள். சிறப்பு விசாரணை குழு தன்னிச்சையான முறையில் செயல்படும். கடந்த சில ஆண்டுகளாக குதிரை பேர விஷயம் அடிக்கடி நடக்கிறது. இது பெரிய பிரச்சினையாக உள்ளது. இதுபோன்ற குதிரை பேரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம்.

முதல்-மந்திரி பதவி என்பது நிரந்தரமானது இல்லை. இது எங்களுக்கு தெரியும். கட்சி தாவல் தடை சட்டத்தை பலப்படுத்த வேண்டும். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்பவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இத்தகைய கடுமையான சட்டத்தை கொண்டுவர வேண்டியது அவசியம்.

ஒத்துழைக்க தயார்

ஆடியோ உரையாடல் விவகாரத்தில் என்னையும் சேர்க்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். என்னையும் விசாரணைக்குள் கொண்டுவரட்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.