மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதுகுடிபோதையில் எம்.பி.ஏ. மாணவி கற்பழிப்புகம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது + "||" + During the birthday celebration Drunken MBA Student rape

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதுகுடிபோதையில் எம்.பி.ஏ. மாணவி கற்பழிப்புகம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதுகுடிபோதையில் எம்.பி.ஏ. மாணவி கற்பழிப்புகம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
பெங்களூருவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ேபாது குடிபோதையில் எம்.பி.ஏ. மாணவியை கற்பழித்ததாக கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு, 

பெங்களூருவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ேபாது குடிபோதையில் எம்.பி.ஏ. மாணவியை கற்பழித்ததாக கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆந்திராவை சேர்ந்தவர் ஆதித்யா. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பெங்களூரு எச்.ஏ.எல். அருகே உள்ள தொட்டனகுந்தியில் தனது நண்பர் ஆரீப்புடன் தங்கியுள்ளார். இந்த நிலையில் ஆரீப்புக்கு கடந்த 9-ந் தேதி பிறந்தநாள் ஆகும். பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரீப் தான் தங்கியிருக்கும் வீட்டில் கொண்டாடினார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரீப்பின் முகநூல் தோழியான 24 வயது நிரம்பிய எம்.பி.ஏ. மாணவி கலந்துகொண்டார். இதையடுத்து ஆரீப், மாணவி மற்றும் வீட்டில் இருந்த ஆதித்யா மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது.

கற்பழிப்பு-கைது

இதைத்தொடர்ந்து இரவு நேரத்தில் உணவு வாங்க ஆரீப் வெளியே சென்றார். மாணவி அங்குள்ள அறைக்கு சென்று தூங்க முயன்றார். இந்த வேளையில் வீட்டில் இருந்த ஆதித்யா, மாணவியை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, உணவு வாங்க சென்ற ஆரீப் வீட்டுக்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவம் குறித்து மாணவி கதறி அழுதபடி கூறினர். இதுபற்றி எச்.ஏ.எல். போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.