மாவட்ட செய்திகள்

பேரம் பேசிய ஆடியோ விவகாரம்:சிறப்பு விசாரணை குழு விசாரிப்பதை நாங்கள் ஏற்கமாட்டோம்சட்டசபையில் எடியூரப்பா பேச்சு + "||" + Inquire into the Special Investigation Team We will not accept it

பேரம் பேசிய ஆடியோ விவகாரம்:சிறப்பு விசாரணை குழு விசாரிப்பதை நாங்கள் ஏற்கமாட்டோம்சட்டசபையில் எடியூரப்பா பேச்சு

பேரம் பேசிய ஆடியோ விவகாரம்:சிறப்பு விசாரணை குழு விசாரிப்பதை நாங்கள் ஏற்கமாட்டோம்சட்டசபையில் எடியூரப்பா பேச்சு
பேரம் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரத்தை சிறப்பு விசாரணை குழு விசாரிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சட்டசபையில் எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு, 

பேரம் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரத்தை சிறப்பு விசாரணை குழு விசாரிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சட்டசபையில் எடியூரப்பா கூறினார்.

கர்நாடக சட்டசபையில் நேற்று எதிா்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேசியதாவது:-

நாங்கள் ஏற்கமாட்டோம்

ஆடியோ உரையாடலை திருத்தி இருக்கிறார்கள். சில உரையாடலை அகற்றிவிட்டு, சிலவற்றை சேர்த்திருக்கிறார்கள். இதில் இடம் பெற்றுள்ள உரை குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

ஆடியோ விவகாரத்தில் முதல்-மந்திரி தான் தவறு செய்தவர். எந்த எம்.எல்.ஏ.வையும் நாங்கள் மும்பைக்கு அனுப்பவில்லை. உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்துக்கொள்வது உங்களின் வேலை. எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் இருப்பது பற்றி எனக்கோ அல்லது பா.ஜனதாவுக்கோ தொடர்பு இல்லை.

கூட்டுக்குழு விசாரணை

எங்களை கலந்து ஆலோசிக்காமல் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்துவதாக முடிவு செய்துள்ளீர்கள். இதற்கு நாங்கள் ஒத்துழைக்கமாட்ேடாம். சட்டசபை கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அதில் உண்மை வெளியே வரட்டும். அதன்படி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமாரசாமி தனது ஆட்சி அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள இந்த ஆடியோ உரையாடல் விவகாரத்தை பயன்படுத்திக் கொள்கிறார். ஆடியோவில் உள்ள உரையாடலை முதல்-மந்திரி குமாரசாமி, தனது தேவைக்கு ஏற்ப திருத்தியுள்ளார்.

விசாரிக்க முடியுமா?

சிறப்பு விசாரணை குழுவை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று சொல்கிறோம் என்றால், இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி, குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்களில் முதல் நபராக உள்ளார்.

மேலும் சிறப்பு விசாரணை குழுவினர், முதல்-மந்திரியிடம் விசாரிக்க முடியுமா?. அதனால் இதை நாங்கள் ஏற்கவேமாட்டோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எதற்கு பயப்படுகிறீர்கள்?

இதற்கு பதிலளித்த மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, “நீங்கள் தவறு செய்யவில்லை என்றால் எதற்காக சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு பயப்படுகிறீர்கள். தவறு செய்தவர்கள் கோர்ட்டு மூலம் தண்டிக்கப்படுவார்கள். விசாரணைக்கு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்” என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...