துப்பாக்கியை காட்டி மிரட்டி நடன அழகிகளை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் சிக்கினார் மற்றொருவருக்கு வலைவீச்சு


துப்பாக்கியை காட்டி மிரட்டி நடன அழகிகளை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் சிக்கினார் மற்றொருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Feb 2019 4:30 AM IST (Updated: 13 Feb 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கியை காட்டி மிரட்டி நடன அழகிகளை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புனே, 

துப்பாக்கியை காட்டி மிரட்டி நடன அழகிகளை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உல்லாசத்துக்கு அழைப்பு

புனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மாவல் தாலுகாவில் உள்ள பால்னே கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டில் மது விருந்து நடத்தினர். இதில், நடனமாடுவதற்காக நவிமும்பை பன்வெலை சேர்ந்த 4 நடன அழகிகள் அழைத்து வரப்பட்டு இருந்தனர்.

மது விருந்து நடந்து கொண்டிருந்த போது, சரத்வீர் (வயது34), கைலாஷ் ஆகிய 2 பேர் நடன அழகிகளை உல்லாசத்துக்கு அழைத்து உள்ளனர்.

வாலிபர் கைது

இதற்கு அவர்கள் மறுக்கவே துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன நடன அழகிகள் குடிபோதையில் இருந்த அவர்களிடம் இருந்து தப்பி அங்குள்ள ஒரு கோவிலில் தஞ்சம் அடைந்தனர். மேலும் அங்கிருந்தவர்களிடம் சம்பவத்தை கூறினர். உடனே அவர்கள் மாவல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரத்வீரை கைது செய்தனர்.

இதற்கிடையே கைலாஷ் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story