காதலியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
காதலியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோா்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
காதலியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோா்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
தீ வைத்து தற்கொலை
மும்பை கார் பகுதியில் காதலியுடன் வசித்து வந்தவர் மீரஜ் கான் (வயது31). 2016-ம் ஆண்டு மார்ச் 19-ந் தேதி இவரது காதலியான பாத்திமா(வயது38) வயதான பெண் ஒருவருக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து உள்ளார். இதனால் மீரஜ் கானுக்கும் அவரது காதலிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவர் பாத்திமாவை சரமாரியாக தாக்கி வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வெளியே சென்றார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்தார். மேலும் அந்த தீயுடன் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்தார்.
7 ஆண்டு ஜெயில்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மரண வாக்குமூலத்தில் தனது சாவிற்கு மீரஜ்கான் தான் காரணம் என கூறிவிட்டு உயிரிழந்தார். இந்தசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கார் போலீசார் மீரஜ்கானை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், கோர்ட்டு காதலியை தற்கொலைக்கு தூண்டிய மீரஜ்கானுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
Related Tags :
Next Story