விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு- 7 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்தன


விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு- 7 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்தன
x
தினத்தந்தி 12 Feb 2019 10:44 PM GMT (Updated: 12 Feb 2019 10:44 PM GMT)

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு 7 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்தன.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த விற்பனைக்கூடத்துக்கு விருத்தாசலம் மட்டுமின்றி அரியலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை அறுவடை செய்து விற்பனை செய்துவிட்டு செல்கின்றனர்.

தற்போது சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் தினமும் ஏராளமான நெல் மூட்டைகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று 7 ஆயிரம் நெல்மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இதில் பி.பி.டி. நெல் ரகம் அதிகபட்சமாக ரூ.1,386-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,250-க்கும், கோ 43 என்ற ரகம் அதிகபட்சமாக ரூ.1,096-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,050-க்கும், சி.ஆர்.1009 என்ற ரகம் அதிகபட்சமாக ரூ.1,086-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,005-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் ஒரு மூட்டை உளுந்து அதிகபட்சமாக 5 ஆயிரத்து 66 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 981 ரூபாய்க்கும், மணிலா அதிகபட்சமாக 5 ஆயிரத்து 892 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 916 ரூபாய்க்கும், எள் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 69 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 9 ஆயிரத்து 389 ரூபாய்க்கும், பச்சைப்பயிறு அதிகபட்சமாக 5 ஆயிரத்து 652 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 296 ரூபாய்க்கும், தட்டைப்பயிறு அதிகபட்சமாக 6 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக 5 ஆயிரத்து 902 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த தானிய மூட்டைகளை விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து சென்றனர்.

Next Story