பின் தொடர்ந்து சென்று பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த என்ஜினீயர் கைது
ஜோகேஸ்வரியில் பள்ளி மாணவியை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
ஜோகேஸ்வரியில் பள்ளி மாணவியை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
மாணவிக்கு தொல்லை
மும்பை ஜோகேஸ்வரியை சேர்ந்த மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும், அவள் டியூசன் செல்லும் போதும், வாலிபர் ஒருவர் அவளை பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவியிடம் நெருங்கி வந்து பேசவும், அவளது கையை பிடிக்கவும் முயற்சி செய்து வந்துள்ளார்.
மேலும் மாணவியின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கும் குறுந்தகவல் அனுப்பியும் தொல்லை கொடுத்து வந்து இருக்கிறார். இதனால் பயந்து போன மாணவி இதுபற்றி தனது தந்தையிடம் கூறினாள்.
என்ஜினீயர் கைது
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அவளது தந்தை சம்பவத்தன்று அந்த வாலிபரை பிடித்து சத்தம்போட்டார். அப்போது அந்த வாலிபர் அவரை பிடித்து கீழே தள்ளி உள்ளார். பின்னர் இது குறித்து மாணவியின் தந்தை ஜோகேஸ்வரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில், அவரது பெயர் சந்தோஷ் மிஸ்ரா(வயது24) என்பதும், என்ஜினீயராக இருப்பதும் தெரியவந்தது.
Related Tags :
Next Story