இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேட்டி


இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2019 4:41 AM IST (Updated: 13 Feb 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி வந்த பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

புதுச்சேரி,

கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது.

கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை 14–ந் தேதி (நாளை) உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்துக்கு வந்து சென்ற பிறகு தெரிவிக்கப்படும். இன்னும் சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story