வானவில் :தண்ணீருக்குள் மூழ்கி புகைப்படம் எடுக்கலாம்
பல்வேறு கோணத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் இது போன்ற ட்ரோன்களை உபயோகிக்க தொடங்கிவிட்டனர். தண்ணீருக்குள் சென்று புகைப்படம் எடுக்கக்கூடிய ட்ரோன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஸ்பிரி ( SPRY ) என்று பெயரிடப்பட்டுள்ள இது மற்ற ட்ரோன்களை போல் மேலே பறந்து புகைப்படம் எடுக்கும். தலைகீழாக திரும்பி நீருக்குள் சென்று போட்டோ எடுக்கும். நீரில் சாகசம் செய்வோருக்கு மிகவும் பயன்படும்.
தண்ணீரின் மேற்பரப்பில் கப்பல் போல மிதக்கவும் செய்யும். மணிக்கு நாற்பத்து மூன்று மீட்டர் பறக்கும் இந்த ட்ரோனில் ஜி.பி.எஸ். வசதி இருப்பதால் நீருக்குள் புகைப்படம் எடுத்து முடித்த பின் வெளியே வந்து மீண்டும் காற்றில் பறக்கத் தொடங்கி விடும். உயர்தரமான சோனி கேமரா லென்ஸ் பொறுத்தப்பட்டுள்ளதால் நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
தரமான 4 k வீடியோக்கள் மற்றும் 12 மேப் தரத்தில் புகைப்படங்களையும் இதனைக் கொண்டு எடுக்கலாம். 64 ஜி.பி. மெமரி கார்டு இருப்பதால் நிறைய சேமித்து கொள்ளலாம். இதனை இயக்குவதற்கு வாட்டர் ப்ரோப் ரிமோட் கண்ட்ரோல் இத்துடன் இணைப்பாக வருகிறது. இதன் விலை சுமார் ரூ.68,500.
Related Tags :
Next Story