மனதை அறியும் ஸ்பீக்கர்


மனதை அறியும் ஸ்பீக்கர்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:18 PM IST (Updated: 13 Feb 2019 4:18 PM IST)
t-max-icont-min-icon

மனம் சோர்வாக இருக்கும் போது நல்ல இசையை கேட்பது அமைதியைத் தரும். இதற்காக தயாரிக்கப்பட்டதுதான் ‘மூட் பாக்ஸ்’ ஸ்பீக்கர்.

‘மூட் பாக்ஸ்’ என்றழைக்கப்படும் இந்த ஸ்பீக்கர் நமது மனநிலையை அறிந்து அதற்கேற்ப பாடலை ஒலிக்கச் செய்யும். காலையில் எழும்போது நல்ல இசையுடன் எழுப்பும் இந்த ஸ்பீக்கர் அன்றைய வானிலை அறிக்கையையும் தெரிவிக்கும்.

இ.எம்.ஐ. என்று சொல்லக்கூடிய உணர்வரியும் அறிவாற்றல் என்னும் புதிய தொழில்நுட்பத்தில் இயங்குகிறது மூட் பாக்ஸ். இசையை ஒலிக்கச் செய்வது மட்டுமின்றி அழகான வண்ணமயமான விளக்குகளை ஒளிரச் செய்து நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

நமக்கு எந்த மாதிரி இசை பிடிக்கும், எது பிடிக்காது என்பதையும் அறிந்து கொண்டுவிடும். வயர்லெஸ் முறையில் இயங்கும் இது நமது குரலின் கட்டளைகளுக்கு கட்டுப்படும்.

மிகச் சிறந்த தரத்தில் மென்மையான இசையை ஒலிக்கும் இதன் விலை சுமார் ரூ.11,500.

Next Story