மாவட்ட செய்திகள்

பயணத்துக்கேற்ற ஜாக்கெட் + "||" + Travelable jacket

பயணத்துக்கேற்ற ஜாக்கெட்

பயணத்துக்கேற்ற ஜாக்கெட்
வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்வோருக்கு குளிரை தாக்குப்பிடிக்கும் வகையிலான ஜாக்கெட் அவசியம்.
பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக வந்துள்ளது கிகா ஜாக்கெட். பயணத்தின்போது கண்களுக்கு வெளிச்சம் படாமல் மூடிக்கொள்ள ஐ வேர் எனப்படும் கருப்புத் திரை, ஐ பாட், ஸ்மார்ட் போனுக்கு பாதுகாப்பான இடம், கழுத்துப் பகுதியில் சுற்றிக் கொள்ள ஸ்கார்ப், அதை பாதுகாப்பாக வைக்க இட வசதி, தலையணை, கடும் குளிரை சமாளிக்கத் தேவையான தெர்மல் வேர் உள்ளிட்ட 16 அம்சங்களைக் கொண்டதாக இது வந்துள்ளது.

விமான பயணத்தின்போது போர்டிங் பாஸ் உள்ளிட்ட பயண டிக்கெட்டுகளை வைக்க ஓரிடம், பாஸ்போர்டை வைக்க ஓரிடம், பேனா வைக்க பாக்கெட், தலை கவசத்தை (ஹூட்) தனியாக கழற்றி மாட்டும் வசதி, குளிர் தாக்காமல் தடுக்கும் முகமூடி, ஹெட்போனை போட வசதியாக வயர் செல்ல பாதை உள்ளிட்ட அனைத்தும் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.15,000.