சாலையை தெளிவாக காட்டும் கண்ணாடி வைசார்


சாலையை தெளிவாக காட்டும் கண்ணாடி வைசார்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:37 PM IST (Updated: 13 Feb 2019 4:37 PM IST)
t-max-icont-min-icon

வெயில் நேரத்தில் காரில் செல்லும் போது வெளிச்சம் கண்களை கூசுவதால் சாலையை சரியாக பார்க்க முடியாது. இதனால் விபத்து நேர்வதற்கும் வாய்ப்புள்ளது.

அட்டாமிக் பீம் என்னும் நிறுவனம் பேட்டில் வைசார் ( BATTLE VISOR ) என்னும் ஒரு கண்ணாடியை தயாரித்துள்ளது. இதனை எந்த மாடல் காரிலும் பொருத்திக் கொள்ளலாம். ஓட்டை போடத் தேவையின்றி இதன் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘கிளிப்’கள் மூலம் ஓட்டுனருக்கு முன்புறம் இருக்கும் கார் கண்ணாடியில் வைத்துக் கொண்டால் சாலையை தெளிவாக காட்டும். வழக்கமாக இது போன்ற கண்ணாடிகள் சில அடி தூரம் வரை மட்டுமே காட்டும். ஆனால் பேட்டில் வைசார் சாலையை முழுவதுமாக காட்டும். எதிரே வரும் வாகனத்தின் வெளிச்சம் நம் கண்களை தாக்காமல் இது பாதுகாக்கிறது. இத்துடன் இணைப்பாக சன்ஸ்பாட் பிளாக்கர் என்னும் சிறிய கண்ணாடியும் கிடைக்கிறது. இது சூரிய வெளிச்சம் கண்களை கூசாமல் இருப்பதற்கு உதவுகிறது. ஆனால் இந்த கண்ணாடியைக் கொண்டு நேரடியாக சூரிய வெளிச்சத்தை பார்ப்பது நல்லதல்ல. அமெரிக்க தயாரிப்பான இது தரமான பொருட்களை கொண்டு உருவாக்கப்படுவதால் தினசரி உபயோகித்தாலும் கீறல்கள் இன்றி நீண்ட ஆயுலுடன் உழைக்கும். இதன் விலை ரூ.1,500.

Next Story