சாங்யோங்கின் கொரான்டோ எஸ்.யு.வி.


சாங்யோங்கின் கொரான்டோ எஸ்.யு.வி.
x
தினத்தந்தி 13 Feb 2019 4:51 PM IST (Updated: 13 Feb 2019 4:51 PM IST)
t-max-icont-min-icon

சாங்யோங் நிறுவனம் தனது புதிய மாடலாக அடுத்த தலைமுறை கொரான்டோ எஸ்.யு.வி. காரை அறிமுகப்படுத்துகிறது.

கொரியாவைச் சேர்ந்த சாங்யோங் நிறுவனம் தனது புதிய மாடலாக அடுத்த தலைமுறை கொரான்டோ எஸ்.யு.வி. காரை ஜெனீவாவில் நடைபெற உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் சர்வதேச அளவில் பிரபலமான மாடல் டிவோலியை விட இது வடிவமைப்பில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்நிறுவனத்தின் கொரான்டோ இரண்டாம் தலைமுறை காரை விட இதில் அதிக இட வசதி உள்ளது. அதேபோல சவுகரியமான இடவசதி, புதிய வடிவிலான டேஷ் போர்டு, மிருதுவான இருக்கைகள் இந்தக் காருக்கு அழகு சேர்க்கின்றன. இது 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. இதே வடிவமைப்பில் பேட்டரி எஸ்.யு.வி. காரையும் இந்நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் சாங்யோங் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதனால் இந்நிறுவனம் தயாரிக்கும் மாடல்களின் வடிவமைப்பு பெரும்பாலும் இங்கு மஹிந்திரா நிறுவனம் தாயாரிக்கும் மாடல்களில் புகுத்தப்படும். மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்.யு.வி.300 மாடலில் பேட்டரி காரை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. சாங்யோங் தயாரிப்புகளை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன.

Next Story