மாவட்ட செய்திகள்

டீசல் என்ஜினில் மாருதி சுஸுகி ‘எஸ் கிராஸ்’ + "||" + Maruti Suzuki S Cross

டீசல் என்ஜினில் மாருதி சுஸுகி ‘எஸ் கிராஸ்’

டீசல் என்ஜினில் மாருதி சுஸுகி ‘எஸ் கிராஸ்’
இந்தியாவில் கார் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிரபல மாடலான ‘எஸ்கிராஸ்’ காரில் டீசல் என்ஜின் கொண்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சுஸுகி ‘எஸ் கிராஸ்’ என்ஜினை நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு உருவாக்கியுள்ளது. இது 1.5 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டுள்ளது. ஏற்கனவே மாருதி சுஸுகி சியாஸ் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்திஉள்ளது. இந்தக் காரைத் தொடர்ந்து எர்டிகா மாடலிலும் இதே டீசல் என்ஜினை பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது உள்ள எஸ் கிராஸ் மாடலில் பியட் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது 90 ஹெச்.பி. திறன் கொண்ட 1.3 லிட்டர் டீசல் என்ஜினாகும். தற்போது இதற்குப் பதிலாக 1.5 லிட்டர் டீசல் என்ஜினை சுஸுகி நிறுவனமே உருவாக்கியுள்ளது. பாரத் புகை விதி 6 அமலுக்கு வர உள்ள நிலையில் அதற்கு ஏற்றார் போல என்ஜினை உருவாக்கி வருகிறது மாருதி சுஸுகி. இவ்வாறு மாற்றப்படும் கார்களின் விலை ரூ.1.5 லட்சம் வரை அதிகமாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித் துள்ளது.

இப்போது எஸ் கிராஸ் மாடல் விலை ரூ.8.85 லட்சம் முதல் ரூ.11.48 லட்சம் வரை உள்ளது. இதே பிரிவில் இந்த மாடலுக்கு போட்டியாக ஹூண்டாய் கிரெடா (ரூ. 10 லட்சம் முதல் ரூ.15.64 லட்சம் வரை), ரெனால்ட் கேப்டுர் (ரூ.11 லட்சம் முதல் ரூ.13.25 லட்சம் வரை) ஆகியவை மட்டும் விளங்குகின்றன.

புதிய மேம்படுத்தப்பட்ட டீசல் மாடல் இவ்விரு வாகனங்களுக்கு தொடர்ந்து போட்டியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.