வானவில் : செடிகளை வளர்க்கும் நவீன பூந்தொட்டி
இது நவீன உலகம். அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்து துறைகளிலும் நமது வாழ்க்கை முறையை எளிதாக்குகின்றன.
அந்த வகையில் வந்ததுதான் பேரட் பாட். இந்த பூந்தொட்டி நவீன தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால் இதில் உள்ள பூஞ்செடிகளை நீங்கள் பராமரிக்கத் தேவையில்லை.
தொட்டியில் உள்ள தாவரத்துக்கு அதாவது பூஞ்செடிக்கு தேவையான தண்ணீரை இதில் உள்ள உணர் கருவி (சென்சார்) அறிந்து அதற்கேற்றவாறு அனுப்பும். காற்றின் ஈரப்பதம், மண்ணில் உள்ள சத்து உள்ளிட்ட விவரத்தையும் உங்கள் ஸ்மார்ட் போனுக்கு அனுப்பிவிடும். இதனால் தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும். இரண்டு பூந்தொட்டிகளின் விலை சுமார் ரூ.17,400.
Related Tags :
Next Story