வானவில் : கேடு விளைவிக்காத பேட்டரி


வானவில் : கேடு விளைவிக்காத பேட்டரி
x
தினத்தந்தி 13 Feb 2019 12:09 PM GMT (Updated: 13 Feb 2019 12:09 PM GMT)

வழக்கமாக பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் விஷத்தன்மை உள்ளதால் மண்ணிற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியவை.

சிறிய கருவிகளுக்கு கூட வேறு வழியின்றி இதையே பயன்படுத்த வேண்டி இருக்கிறது. பார்சிலோனாவை சேர்ந்த நிறுவனம் பியூலியம் என்னும் புதிய வகை பேட்டரி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. காகிதத்தை மூலப்பொருளாக கொண்டு இந்த பேட்டரி தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் ரத்த பரிசோதனை செய்து கொள்வதற்கும், கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளவும் இந்த பேட்டரியை பயன்படுத்தலாம் . உபயோகித்த இந்த பேட்டரியை தூக்கி எறியாமல் மீண்டும் பயன்படுத்தலாம். ரத்தம் மற்றும் சிறுநீரைக் கொண்டே தேவையான ஆற்றலை பெற்றுக் கொள்கிறது இந்த பியூலியம் பேட்டரி.

Next Story